|
"தூர நோக்கு (Vision)" புதிய தொழிநுட்பத்துடன் இணைந்த வினைத்திறனும் பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை வழங்கும் உன்னத நிறுவனம் ஆதல். |
|
"செயற்பாடு (Mission)" மக்களின் அபிலாசைகளுக்கும், அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும் ஏற்றதாக மக்களின் பங்களிப்புடனான நிலைபேறான பிரதேச அபிவிருத்திக்கு வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையினை உத்தரவாதப்படுத்தல். |
| இலங்கையின் யாழ் மாவட்டத்தின் மையப்பகுதியாக வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம் விளங்குகிறது. வடக்கில் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலகமும், கிழக்கில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகமும், தென்கிழக்கில் நல்லூர் பிரதேச செயலகமும், மேற்கில் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இப்பிரதேச செயலகப் பிரிவில் 30 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள் செம்மண் வகையைச் சார்ந்த நிலங்களைக் கொண்டவையாகும். குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சுன்னாகம், கந்தரோடை, உடுவில், இணுவில், தாவடி மற்றும் சங்குவேலி ஆகிய கிராமங்களில் பணப்பயிர் வகைகள், வெங்காயம், மரக்கறி போன்றனவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்வகை உள்ளது.
சுன்னாகம் பகுதியானது நகரமயமாதலின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தப் பிரதேச செயலகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக விவசாய அபிவிருத்தி மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில் அபிவிருத்திக்கு ஏற்ற இடமாக இப்பகுதி அமைந்துள்ளது. |
எமது முன்னாள் பிரதேச செயலாளா்கள்
| பெயர் | இருந்து | வரை |
| திரு.பி.எல்.பற்றிக் | 1972 | 1977 |
| திரு.எஸ்.குமாரசாமி | 1977 | 1978 |
| திரு.ஏ.சி.செபநாயகம் | 1978 | 1984 |
| திரு.ஆ.மகாலிங்கம் | 1984 | 1990 |
| திரு.வே.வீரபத்திரபிள்ளை | 1990 | 1991 |
| செல்வி.த.தனுஜா | 1991 | 1994 |
| திரு.ஆ.மகாலிங்கம் | 1994 | 2001 |
| திரு.க.கேதீஸ்வரன் | 2001 | 2002 |
| திரு.எஸ்.ஆா்.ஜெயப்பிரகாசம் | 2002 | 2003 |
| திரு.சி.திருவாகரன் | 2003 | 2007 |
| திருமதி.ச.மஞ்சுளாதேவி | 2007 | 2012 |
| திரு மு.நந்தகோபாலன் | 2012 | 2017 |
| திருமதி வ.மதுமதி | 2017 | 2018 |
| திரு சி.ஜெயகாந் | 2018 | 2020 |
| திரு டி.முகுந்தன் | 2020 | 2023 |
| திரு.பா.ஜெயகரன் | 2023 | இன்று |


























