நிர்வாகப் பிரிவு
குறிக்கோள்
உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலகக் கட்டமைப்பை வலுப்படுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
|
1
|
பலதரப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல். |
|
2
|
கிராம அலுவலர் சான்றிதழ்களை உறுதிப்படுத்தல். |
|
3
|
அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல். |
|
4
|
வருமானங்களைச் சேகரித்தல். |
சமூகசேவைப் பிரிவு
குறிக்கோள்
வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல். அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
பிரதான தொழிற்பாடுகள்
|
1
|
நிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல். |
|
2
|
வயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல். |
|
3
|
உலர் உணவு நிவாரணம் வழங்குதல். |
திட்டமிடல் பிரிவு
குறிக்கோள்
சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
|
1
|
அபிவிருத்தி நடவடிக்கைகளை இனங்காணுதல். |
|
2
|
அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்தல். |
|
3
|
PMCS ஐ மீளப் புதுப்பித்தல். |
|
4
|
பிரதேச வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்துதல். |
கணக்கியல் பிரிவு
குறிக்கோள்
நிதிக் கணக்கியல் பதிவியல் நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொள்வதினூடே பிரதேச செயலகத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குதல்.
பிரதான தொழிற்பாடுகள்
|
1
|
வருடத்திற்கான திட்டமிடல் பணிகளைத் தயாரித்தல். |
|
2
|
சகலவிதமான கொடுப்பனவு முறைகளையும் மேற்கொள்ளல். |
|
3
|
நில அளவை கொடுப்பனவு நடவடிக்கைகளுக்குத் துணைபுரிதல். |
|
4
|
கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். |
|
5
|
கணக்கியல் நிதி அறிக்கைகளைத் தயாரித்தல். |
பதிவாளர் பிரிவு
குறிக்கோள்
பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும்.
பிரதான தொழிற்பாடுகள்
|
1
|
பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஏற்றுக்கொள்ளல். |
|
2
|
பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்கள் வழங்குதல். |
ஓய்வூதிய பிரிவு
குறிக்கோள்
அரசசேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகத்தர்களுக்கோ, அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாகச் சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களைப் பாதுகாத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
|
1
|
மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கல். |
|
2
|
விதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதியத் திணைக்களத்திற்குப் பரிந்துரை செய்தல். |















