new blinking  வீடமைப்புத்திட்டம்- 2026

வலிகாமம் தெற்கு, உடுவில் பிரதேச செயலக பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்டத்தில் 3ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் வருமாறு இவ்விபரம் தொடர்பாக பிரதேச செயலகத்திலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இவை தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எழுத்து மூலம் பிரதேச செயலருக்கு அறியத்தரவும்  

பயனாளிகளின் விபரம்

 

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம்

 
எமது இலங்கைத் தாய்த் திருநாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று (04.02.2025) வலி தெற்கு பிரதேச செயலகத்தில் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள் சகிதம் இனிதே கொண்டாடப்பட்டது. மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றி வைத்துச் சுதந்திர தின உரையினை நிகழ்த்தினார். பின்னர் மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் மதிப்புக்குரிய உதவிப் பிரதேச செயலாளர் இணைந்து மரக்கன்று நாட்டி வைத்தனர். அத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது
 
     
 
WhatsApp Image 2025 02 04 at 13.19.32 4c5aaa66   WhatsApp Image 2025 02 04 at 13.19.32 09438d55   WhatsApp Image 2025 02 04 at 13.19.33 b9e3a07d  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.33 d039f9e4   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 c72f8fe9   WhatsApp Image 2025 02 04 at 13.19.34 90f5a7f1  
           
WhatsApp Image 2025 02 04 at 13.19.34 2f7e12fe   WhatsApp Image 2025 02 04 at 13.19.35 b566ff4f    WhatsApp Image 2025 02 04 at 13.19.35 0d0a98b2  

பிரதேச செயலாளர்

ds  பெயர் திரு பாலசுந்தரம் ஜெயகரன்
தகைமை
  • இளங்கலை வணிக நிர்வாகம் (நிதி சிறப்பு)
  • பொது நிர்வாகவியல் டிப்ளோமா
பணி வரலாறு

1999 - 2005              - பொது முகாமைத்துவ சேவை உதவியாளர் 
2005 -  2006             - நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்
2006- 2016               - உதவிச் செயலாளர், வடக்கு மாகாண சபை 
2016 - 2018              - உதவிப் பிரதேச செயலாளர், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம்
2018 - 2020              - பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், மடு 
2020 - 2024.01.23    - பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கரைச்சி
2024.01.24 -இன்று - பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், உடுவில்

உதவிப் பிரதேச செயலர்

 ADS1 பெயர் திரு ஜெ.றெமின்ரன்
தகைமை இலங்கை நிர்வாக சேவை III
பணி வரலாறு

2023.04.24 - இன்று - உதவிப் பிரதேச செயலர் - வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம்

கணக்காளர்

 Mrs.M. Saththiyaruban பெயர்  திருமதி மீரா சத்தியரூபன்
தகைமை

வணிகமானி

யாழ் பல்கலைக்கழகம்

பணி வரலாறு

31.10.2005 - 24.01.2012 - அபிவிருத்தி உத்தியோகத்தர் - நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்.

25.01.2012 - 13.06.2013 - அபிவிருத்தி உத்தியோகத்தர் - காணி நிர்வாகத் திணைக்களம்.

14.06.2013 - 16.02.2014 - அபிவிருத்தி உத்தியோகத்தர் - கட்டடங்கள் திணைக்களம்.

17.02.2014 - 30.04.2014 - கணக்காளர் SLACS - III - MILODA பயிற்சி.

01.05.2014 - 31.12.2015 - கணக்காளர்- நகர சபை, சாவகச்சேரி.

01.01.2016 - 11.09.2020 - கணக்காளர்- கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாணம்.

01.07.2017 - 11.09.2020 - கணக்காளர்(பதில்) - சமூக சேவைகள் திணைக்களம்.

16.09.2020 - இன்று            - கணக்காளர்- பிரதேச செயலகம், உடுவில்.

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

  M.Ratneswari பெயர்  திருமதி ம.இரத்தினேஸ்வரி
தகைமை தொழில் நிர்வாகமாணி
பணி வரலாறு

 2005.01.01 - 2005.07.31 - பட்டதாரிப் பயிலுநர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்.

2005.08.01 - 2010.09.02 - அபிவிருத்தி உதவியாளர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்.

2010.09.03 - 2011.06.05 - உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்.

2011.06.06 - 2016.06.30 - உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம் காரைநகர்

2016.07.01 - இன்று - உதவித் திட்டமிடல் பணிப்பாளர் - பிரதேச செயலகம் உடுவில்

நிர்வாக அதிகாரி

   AO Sukirtha Birabaharan பெயர்  திருமதி சு.பிரபாகரன்
தகைமை தகவல் தொழினுட்ப மானி
பணி வரலாறு

1999.05.03 - 2000.10.04 - எழுதுநர் - வலயக் கல்வி அலுவலகம், வேலணை

2000.10.05 - 2018.07.01 - முகாமைத்துவ உதவியாளர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்

2018.07.02 - 2019.08.22 -  முகாமைத்துவ உதவியாளர் பிரதேச செயலகம், நல்லூர்

2019.08.23 - இன்று -         நிர்வாக உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், உடுவில்

நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)

   img169 பெயர் திரு சே.சிறீஸ்கந்தராசா
தகைமை

இளங்கலைமானி

முதுகலைமானி

பணி வரலாறு

 1994.08.01 - 2003.01.31 - கிராம அலுவலர் - தெல்லிப்பழை பிரதேச செயலகம்

2003.02.01 - 2006.01.06 -  கிராம அலுவலர் -  நல்லூர் பிரதேச செயலகம்

2006.01.07 - 2008.04.24 - கிராம நிர்வாக அலுவலர் - நல்லூர் பிரதேச செயலகம்

2008.04.25 - 2016.12.31 - கிராம நிர்வாக அலுவலர் - யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்

2017.01.01 - இன்று - கிராம நிர்வாக அலுவலர் - உடுவில் பிரதேச செயலகம்

 
 

"தூர நோக்கு (Vision)"

புதிய தொழிநுட்பத்துடன் இணைந்த வினைத்திறனும் பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை வழங்கும் உன்னத நிறுவனம் ஆதல்.

 
 

"செயற்பாடு (Mission)"

மக்களின் அபிலாசைகளுக்கும், அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும் ஏற்றதாக மக்களின் பங்களிப்புடனான நிலைபேறான பிரதேச அபிவிருத்திக்கு வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையினை உத்தரவாதப்படுத்தல்.

இலங்கையின் யாழ் மாவட்டத்தின் மையப்பகுதியாக வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம் விளங்குகிறது. வடக்கில் வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலகமும், கிழக்கில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகமும், தென்கிழக்கில் நல்லூர் பிரதேச செயலகமும், மேற்கில் வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இப்பிரதேச செயலகப் பிரிவில் 30 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள் செம்மண் வகையைச் சார்ந்த நிலங்களைக் கொண்டவையாகும். குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, சுன்னாகம், கந்தரோடை, உடுவில், இணுவில், தாவடி மற்றும் சங்குவேலி ஆகிய கிராமங்களில் பணப்பயிர் வகைகள், வெங்காயம், மரக்கறி போன்றனவற்றைப் பயிரிடுவதற்கு ஏற்ற வளமான மண்வகை உள்ளது.

சுன்னாகம் பகுதியானது நகரமயமாதலின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தப் பிரதேச செயலகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குறிப்பாக விவசாய அபிவிருத்தி  மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில் அபிவிருத்திக்கு ஏற்ற இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

 
          

எமது முன்னாள் பிரதேச செயலாளா்கள் 

பெயர் இருந்து வரை
திரு.பி.எல்.பற்றிக்                1972 1977
திரு.எஸ்.குமாரசாமி 1977 1978
திரு.ஏ.சி.செபநாயகம் 1978 1984
திரு.ஆ.மகாலிங்கம்           1984 1990
திரு.வே.வீரபத்திரபிள்ளை 1990 1991
செல்வி.த.தனுஜா 1991 1994
திரு.ஆ.மகாலிங்கம் 1994 2001
திரு.க.கேதீஸ்வரன் 2001 2002
திரு.எஸ்.ஆா்.ஜெயப்பிரகாசம் 2002 2003
திரு.சி.திருவாகரன் 2003 2007
திருமதி.ச.மஞ்சுளாதேவி 2007 2012
திரு மு.நந்தகோபாலன் 2012 2017
திருமதி வ.மதுமதி 2017 2018
திரு சி.ஜெயகாந் 2018 2020 
திரு டி.முகுந்தன் 2020 2023
திரு.பா.ஜெயகரன் 2023 இன்று 


 

பதவி மத்திய அரசு வெற்றிடம் /மிகுதி
ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி
பிரதேச செயலர் 01 01 -
உதவிப் பிரதேச செயலர் 01 01 -
கணக்காளர் 01 01 -
நிர்வாக அலுவலர்r 01 01 -
நிர்வாக கிராமஅலுவலர் 01 01 -
மொழிபெயர்ப்பாளர் 02 01 01
அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் 01 01 -
அபிவிருத்தி உத்தியோகத்தர் 08 08 -
தொழினுட்ப உத்தியோகத்தர் 01 01 -
பொது முகாமைத்துவஉதவியாளர் 28 28 -
கிராம அலுவலர் 30 25 05
தகவல் தொடர்பாடல் உதவியாளர் 01 01 -
தொழினுட்ப உதவியாளர் 01 - 01
சாரதி 02 02 -
அலுவலகப் பணியாளர் 07 07 03
03

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

30
ஜூலை2025
முதியோர் கொடுப்பனவு

முதியோர் கொடுப்பனவு

 முதியோர் கொடுப்பனவு  

01
ஏப்2025

உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள்” (Start Your Business-SYB)

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) நிதி அனுசரணையுடன் வடக்கு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top